எப்போது மீன்களை வாங்கும்போது, சதைப்பகுதி கெட்டியாக இருக்க வேண்டுமாம்.. கைகளால் தொட்டதுமே பொல பொலவென அமுங்க கூடாது.. விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் மீன்களின்மீது, நிறைய ஈக்கள் மொய்த்தாலே அது நல்ல மீன்கள் என்று எடுத்து கொள்ளலாம்.
ஒருவேளை மருந்துகளை மீன்கள் மீது தெளித்து வைத்திருந்தால், மருந்து வாசனைக்கு ஈக்கள் மொய்க்காது.. மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவரக்கூடாது.. கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்.. வெள்ளை கலரில் கண்கள் இருந்தால் வாங்கக் கூடாது.. மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கவேணடும். வெள்ளை கலராக செவுள்கள் இருக்கக்கூடாது.
மீனின் தலைப்பகுதியை கைகளால் தூக்கி பார்த்தால், வால் பகுதி விறைப்பாக இருக்க வேண்டும். மீனின் கழுத்து பகுதியும் விறைப்பாக இருக்க வேண்டும். நிறைய செதில்களுடன் ரெட் கலரில் இருக்க வேண்டும்..
சில இடங்களில், மீன்களின் மீது ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசி விற்பார்கள்.. அதாவது, சவக்கிடங்குகளில் மனித உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும்தான் ஃபார்மலினை பயன்படுத்துவார்கள்.
இந்த ஃபார்மலின் ரசாயனத்தைதான், மீன்கள் மீது பூசி வைப்பார்கள்.. இதனால், மீன்கள் கெட்டுப்போய் பல நாள்கள் ஆகியிருந்தாலும் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஆனால், ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், ஒவ்வாமை, வாந்தி, தலைச்சுற்றல், சரும நோய்கள் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்... ஃபார்மலின் பூசப்பட்டது மட்டுமல்லாமல், பல நாட்கள், ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனையாகும் மீன்களை சமைத்து சாப்பிட்டாலும், இந்த உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்..
அதுமட்டுமல்ல, ஃபார்மலின் பூசப்பட்ட மீன்களை உண்டுவந்தால் புற்றுநோய் வருவதற்கான அபாயமும் அதிகமாம். எனவே, அன்றைய தினம் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது அதிகபட்சம் 2 நாள்கள்வரை ஐஸில் வைத்த மீன்களை சாப்பிட்டால் மட்டுமே போதும் என்கிறார்கள்.
மீன்களை வாங்கும்போது, ENT டெஸ்ட் செய்து வாங்க வேண்டும் என்கிறார்கள் உணவுத்துறை பாதுகாப்பு துறையினர். அதாவது, E for = கண்களாலேயே மீன்களை அறிந்து கொள்வது.. N for முகர்ந்து அறிதல், T for தொட்டு அறிதல் என்பதுதான் இ.என்.டி. சோதனையின் அடிப்படையாகும்.
பார்த்தவுடனேயே மீன்கள் பளபளப்பாகவும், செதில்களில் சேதம் அடையாமலும், உயிருள்ள மீனுக்கு இருப்பதுபோலவே இருக்க வேண்டுமாம்.. மீனை முகர்ந்து பார்த்தால், நாற்றம் அடிக்ககூடாது.. அதாவது, புதிய மீன்களில் நாற்றம் அடிக்காதாம்.. சுத்தமான தண்ணீரின் வாசம் அல்லது வெள்ளரியின் வாசம் மட்டுமே இருக்கும். மீனை தொட்டு அழுத்தினால் குழிவிழக்கூடாது. இதுபோன்ற மீன்களை வாங்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்று எச்சரிக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சி புகார்
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!