பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார்.அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல இன்று மாலை வெளியானது.இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்க உள்ளார். இதனால் தென் சென்னை தொகுதி பிரபலங்கள் மோதும் ஸ்டார் தொகுதியாக உருவெடுத்துள்ளது. தென் சென்னையில் வெற்றி பெறுவது தமிழிசையா அல்லது தமிழச்சி தங்க பாண்டியனா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழச்சியும், ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். அதில் 5,64,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்ச்சி தங்க பாண்டியன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S