தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!