POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

களத்தை சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு பயம் - ஆளூர் ஷா நவாஸ்

2 years ago 28 மார்ச் 2024 01:18 PM | views : 224
சென்னை,எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் பலரை வேட்பாளர்களாக பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா என்னை கேட்டுக்கொண்டார். ஆனால் நான் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டேன்.
தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை.என்று தெரிவித்தார். இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு களத்தை சந்திக்க பயம் என வி.சி.க.கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பா.ஜ.க, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?. களத்தை சந்திக்க பயம். என தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK தவெக ANNAMALAI AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் காங்கிரஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் இந்திய அணி கைது கோவை தமிழகம் CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM திருமாவளவன் UDHAYANIDHI STALIN வடகிழக்கு பருவமழை வன்னியர் KEERTHY SURESH தேவர் PARLIAMENT ELECTION அமமுக பிரதமர் மோடி கொலை TAMIL ACTRESS தீபாவளி தென்காசி சீமான் நெல்லை AJITH OPS ஓபிஎஸ் NELLAI SURIYA ASSEMBLY ELECTIONS தமிழ்நாடு THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL அஜித் திருப்பரங்குன்றம் கொரோனா சூர்யா மதுரை PRIME MINISTER MODI கீர்த்தி சுரேஷ் விடுமுறை அன்புமணி CSK பாலியல் தொல்லை தூத்துக்குடி கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION NORTHEAST MONSOON