சென்னை, குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. 16 துணை கலெக்டர்கள், 23 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி கமிஷனர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள், 14 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், ஒரு மாவட்ட கல்வி அலுவலர், ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு படை) என மொத்தம் 90 காலிப் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி என்ன?, என்ன மாதிரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? உடற்தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் என்ன? தேர்வு கட்டணம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை
https://www.tnpsc.gov.in/Document/english/04-2024-GRP1-ENG-.pdf
என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!