நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக பா.ஜனதாவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்த சூழலில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
தொடர்ந்து, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். கோவையில் பிரதமர் மோடி வாகன அணிவகுப்பு நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா தொண்டர்கள், பொது மக்கள் அவருக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
இந்தநிலையில், சென்னையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக, வருகிற 9-ந்தேதி, சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரமாண்டவாகன அணிவகுப்பு நடத்த பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாகவும், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான, பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!