கச்சத்தீவு ஒப்படைப்பு விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-கச்சத்தீவு விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்துள்ளார்.கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாகவும், எனவே, கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்ப தி.மு.க.வுக்கு உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா கூறினார்.
எனவே, கச்சத்தீவு பிரச்சினை குறித்து பொய் பிரசாரம் செய்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S