POLLING 📊 TN ELECTION 2026

 

குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுதான் தி.மு.க.வினரின் வாடிக்கை: அண்ணாமலை

2 years ago 02 ஏப்ரல் 2024 06:30 AM | views : 171
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை ஆனைகட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-இந்தியாவின் முதல் குடி பழங்குடியின இனம் தான். பழங்குடியின மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

மத்திய அரசின் நிதி மட்டுமே மலைப்பகுதிகளுக்கு வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளுமே கிடைத்தன.பழங்குடியின இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை இந்தியாவின் முதல் குடிமகளாக, குடியரசு தலைவராக அமர்த்தி கவுரப்படுத்தியது பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு தான். மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் பாதுகாவலராக இருந்து வருகிறார்.பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது.

அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏகலைவா பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியிலும் அந்த பள்ளி வர வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆனைகட்டி பகுதிக்கு மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த தேர்தல் கவுன்சிலர் யார்? பஞ்சாயத்து தலைவர் யார்? முதலமைச்சர் யார்? என்பதற்கான தேர்தல் அல்ல. இது பிரதமருக்கான தேர்தல். டெல்லியில் யார் ஆட்சி அமைந்தால் நல்லது நடக்கும் என்பதற்கான தேர்தல்.

எனவே மக்கள் யோசித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களை தாண்டி வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும். 100 சதவீதம் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் இங்கு கிடைக்க வேண்டும். மோடி பிரதமராக வந்தால் தான் நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்.இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி மலைப்பகுதி தான். நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் கொடுப்பவர்கள் நீங்கள் தான். இங்குள்ள ஒவ்வொரு மரமும் வைரத்திற்கு சமம். அனைவரும் இந்த பகுதியை தேடி தான் வருவார்கள்.செங்கல் சூளை பிரச்சனையில் தி.மு.க. குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. இதுதான் எப்போதும் அவர்களுக்கு வேலையாக உள்ளது. இது அவர்களுக்கு கைவந்த கலை. இந்த விவகாரத்தில் சுற்றுச்சுழல் அமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்ற 2 வண்டிகளும் போகாது. அந்த வண்டிகள் லோக்கல் வண்டிகள். இங்கேயே தான் சுற்றி கொண்டிருக்கும்.அவர்களுக்கு பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே தெரியாது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த ஒரு டாஸ்மாக்கை மட்டும் அகற்றுவது நமது நோக்கம் அல்ல. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றி விட்டு, அதற்கு பதிலாக கள்ளுக்கடை திறக்கப்படும்.தி.மு.க. 5 வருடம் மக்களை மறந்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மக்கள் ஞாபகம் வரும். தேர்தல் நேரத்தில் வந்து பணம் கொடுத்து கொடுத்து வெற்றி பெறுகின்றனர்.

மீண்டும் 5 வருடம் மக்களை மறந்து விடுகிறார்கள். எப்படியாவது வாக்கை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அதனை மக்களாகிய நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI ADMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி கனமழை TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் PMK AIADMK காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS கோவை கைது சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சீமான் திருமாவளவன் INDIAN CRICKET TEAM இந்திய அணி COIMBATORE கொலை KEERTHY SURESH AJITH தீபாவளி பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தென்காசி அமமுக NELLAI நெல்லை THIRUMAVALAVAN தேவர் ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM OPS EDAPPADI PALANISWAMI அஜித் கள்ளக்காதல் SEEMAN தமிழக சட்டசபை தேர்தல் CSK விடுமுறை தூத்துக்குடி மதுரை PRIME MINISTER MODI வன்னியர் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் MADURAI ஓபிஎஸ் NORTHEAST MONSOON ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்