மயிலாடுதுறை,மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்கும் பணி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஆடு ஒன்றை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டதாக தகவல் பரவியது. ஆனால், ஆட்டை சிறுத்தை கொல்லவில்லை என்றும், நாய் கடித்ததில் ஆடு இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களாக வனத்துறையின் எந்த கேமராவிலும் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்த நிலையில், முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்கும்பணி இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷனில் உள்ள 5வது நடைமேடையில் ஆடு ஒன்றின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியுள்ளது. இதையடுத்து இன்று காலை அங்கு வந்த வனத்துறையினர் சிதறி கிடந்த ஆட்டின் பாகங்கள் ஆய்வு செய்து சிறுத்தை அருகே எங்காவது பதுங்கி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதேவேளை, சிறுத்தையின் புகைப்படம் தற்போது சிக்கியுள்ளது.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!