POLLING FLAMES

 

தோல்வியிலும் சாதனை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர்!

1 year ago 27 ஜூன் 2024 08:12 AM | views : 232
டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது :

தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதோடு இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியிருந்தாலும் அந்த அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மட்டும் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.


ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில் அந்த போட்டியிலும் அவர் விக்கெட்டை கைப்பற்றினால் அவர் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் காங்கிரஸ் PARLIAMENT ELECTION இந்திய அணி தமிழகம் CONGRESS கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் INDIAN CRICKET TEAM அமமுக கைது AJITH KEERTHY SURESH சீமான் OPS தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN அஜித் கள்ளக்காதல் தேவர் வன்னியர் தூத்துக்குடி ELECTION COMMISSION SURIYA தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH விடுமுறை CSK கீர்த்தி சுரேஷ் சூர்யா திருப்பரங்குன்றம் மதுரை