ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட முதல் போஸ்டரில் வினேஷ் போகத் இடம்பெற்றிருந்த நிலையில், மற்றொரு போஸ்டரில் அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.இந்த தொடரில், பெண்கள் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து ஆதரவுக் குரல் எழுந்தது. ஆனால், ஒலிம்பிக் அமைப்பு வெள்ளிப் பதக்கம் வழங்க மறுப்பு தெரிவித்ததால், விளையாட்டிற்கான சர்வதேச நீதிமன்றத்தில் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மனு பாக்கர், நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட நன்றி தெரிவிக்கும் போஸ்டரில் வினேஷ் போகத்தின் படமும் இடம்பெற்றிருந்தது.ஆனால், ஜியோ சினிமா வெளியிட்ட மற்றொரு போஸ்டரில் வினேஷ் போகத்தின் படத்தை மட்டும் நீக்கியுள்ளனர்.
பாஜக ஆதரவாளர்கள் வினேஷ் போகத் படத்தை வெற்றி பெற்ற வீரர்களுடன் சேர்த்து வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்ததால்தான், அவரது புகைப்படம் நீக்கப்பட்டதாக இணையத்தில் ஜியோ சினிமாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது..இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள நீடா அம்பானிதான் ஜியோ சினிமாவின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது..
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!