POLLING FLAMES

 

டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

1 year ago 13 ஆகஸ்ட் 2024 12:25 PM | views : 244
தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்து வரும் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.எஸ்.கே. பிரபாகரை, டிஎன்பிஎஸ்சியின் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-யின் தலைவராக எஸ்.கே. பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

.முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரச பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பியது. இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு மீண்டும் பரிந்துரையை அனுப்பியது.

ஆனாலும், அந்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழக உள்துறை செயலாளராக எஸ்கே பிரபாகர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எஸ்.கே. பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி-க்கு, புதிதாக 9 உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார். . மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் INDIAN CRICKET TEAM கோவை பாமக கனமழை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE முக ஸ்டாலின் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தேவர் சீமான் NELLAI KEERTHY SURESH OPS தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் SURIYA கைது அமமுக நெல்லை THIRUMAVALAVAN AJITH ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி மதுரை அஜித் வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை PARLIAMENT ELECTION RAJINIKANTH தூத்துக்குடி தென்காசி நடிகை பாலியல் தொல்லை