திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.
சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புட்லூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஸ்வரி திருவள்ளூரில் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் சுரேசின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார்.
இதனை அறிந்த சுரேசின் மனைவி பார்வதி கண்டித்தார். மேலும் ராஜேஸ்வரியை கடைக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார். எனினும் கடந்த 9-ந்தேதி ராஜேஸ்வரி மீண்டும் சுரேசின் காய்கறி கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் மார்க்கெட்டிற்கு வந்து கடையில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றியுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் இருந்த விளக்கிலிருந்து ராஜேஸ்வரி மீது தீப்பற்றியது. இதில் உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் ராஜேஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பார்வதி, அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.இந்தநிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இதற்கிடையே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!