POLLING FLAMES

 

இயக்குனர்களை திருமணம் செய்த நடிகைகள்.. உங்களுக்கு பிடித்த ஜோடி யாரு.?

4 years ago 17 ஆகஸ்ட் 2021 03:58 PM | views : 269
இந்திய சினிமாவில் எத்தையோ நாயகிகள் இயக்குனர்களை விரும்பி கரம் பிடித்ததுண்டு. அப்படியான ஒன்றுக்கு தென்னிந்திய திரைகளும் விதிவிலக்கல்ல.

சரண்யா பொன்வண்ணன்: பல படங்களில் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்வண்ணன் இவர் ஒரு துணை இயக்குனர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. இப்போது அம்மா கேரக்கடரில் அசத்தி வரும் சரண்யா நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

பூர்ணிமா பாக்யராஜ்: 90களில் சில படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ். அதே போல் 90களில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாக்யராஜ். இருவரும் இணைந்த படம் 'டார்லிங்' அடுத்ததாய் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு நடிகர் சாந்தனு என்கிற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன்: தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்திலும் அசத்தி வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தின் வாயிலாக இந்தியாவே அறிந்த நாயகியானார். இவருடன் இணைந்த இயக்குனர் கிருஷ்ணா வம்சியுடன் இணைந்த 'சந்திரலேகா' படத்தின் நட்பு காதலாக மாறியது. மணம் முடித்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.


ரோஜா செல்வமணி: 90களில் தவிர்க்க முடியா நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இப்போது அரசியல் பொறுப்புகள் என படுபிசியாகிவிட்டார். தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் 'செம்பருத்தி' படத்தில் அறிமுகமானவருக்கு அங்கிருந்தே இயக்குனர் செல்வமணியின் துணைதான். இருவரும் மணம் முடித்த நிலையில் ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர்.

பிரீத்தா ஹரி: இயக்குனர் ஹரி பல்வேறு மாஸ் ஆக்சன் படங்களின் வாயிலாக தமிழ் சினிமாவில் பெரிதும் அறியப்பட்டவர். நடிகர் விஜயக்குமார் மஞ்சுளா தம்பதியின் மகளும் அருண்விஜயின் சகோதரியமான ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகான வெற்றிகளால் தான் தமிழ் திரையில் மின்னத்துவங்கினார் இயக்குனர் ஹரி. திருமணம் முடித்த இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

தேவயாணி : 90 களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தேவயாணி ராஜ்குமார் திருமணம் தான். பெருமளவு ரசிகர்களால் குடும்ப நடிகையாக அறியப்பட்டவர் தேவையாணி. இயக்குனர் ராஜ்குமாரும் பல்வேறு நல்ல படங்களை கொடுத்திருந்தார். இயக்குனர் ராஜ்குமாருடன் இணைந்த தேவையாணிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

குஷ்பு சுந்தர்: 90களில் தமிழ் திரைக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழ் திரை. சுந்தர் சியும் அப்போதிலிருந்தே அறியப்பட்ட ஒரு இயக்குனர். இருவரும் இணைந்தது முறைமாமன் படத்தில் தான் அதற்கு பிறகான காதலில் விழுந்தவர் தான் குஷ்பு. இருவரும் இணைந்த திருமணத்தின் வாயிலாய் இரு மகள்கள் உள்ளனர். புகழின் உச்சத்தில் இருந்த நிலையிலேயே திருமணம் முடித்த இந்த பந்தங்கள் இன்று வரை இணைந்து வாழ்வதால் பேசுபொருளாகியுள்ளன… மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK PMK முக ஸ்டாலின் ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION கோவை UDHAYANIDHI STALIN திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு AJITH அமமுக OPS KEERTHY SURESH சீமான் கைது பிரதமர் மோடி BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் அஜித் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION கள்ளக்காதல் தேவர் வன்னியர் RAJINIKANTH CSK 2024 T20 WORLDCUP தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் சூர்யா தூத்துக்குடி மதுரை விடுமுறை SURIYA