திருநெல்வேலி: கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டியில் இன்று நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த அக்கா அவரது தம்பி தம்பி இருவரும் உயிரிழந்தனர்
கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங் (50) இவரது அக்கா ஜெயந்தி (55). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை தங்களது காரில் மதுரையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் திருநெல்வேலி கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது.
காரின் உள்ளே இருந்த ஜெயச்சந்திர சிங் மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S