தேவர் மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே.
1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி, தலைவாசல் விஜய், வடிவேலு உள்பட ஏராளமானோர் இதில் நடித்திருந்தனர். சிவாஜியின் யதார்த்த நடிப்பின் மகுடம் தேவர் மகன். கமலே இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.
அச்சு அசலான தமிழக கிராமத்து வாழ்வியலைச் சொன்ன படம். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும், நாயகனாக விக்ரமும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே கமலின் தயாரிப்பில் (விக்ரம் - கடாரம் கொண்டான், விஜய் சேதுபதி - விக்ரம்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவர் மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே. தேவர் மகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர்கள் தேவர் மகன் 2 படத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புள்ளது.
தேவர் மகன் இரண்டாம் பாகம் குறித்து மலையாள தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேவர் மகன் 2 உருவாவது நிச்சயம் என்கிறார்கள். தேவர் மகனில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல், தமிழக கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் விருப்பப் பாடலாகி தலித்துகள் அதனை பாட நிர்ப்பந்திக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. சாதி மோதல்களுக்கும் இந்தப் படமும், குறிப்பிட்ட பாடலும் காரணமாக அமைந்தன. அப்படியான அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில் தேவர் மகன் 2 உருவாவது நல்லது.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கர்நாடக திரைப்பட வர்த்தகச் சபையுடன் பேச்சுவாரத்தை நடத்தும் வரை தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடப்போவதில்லை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் ஜூன் 5 அன்று வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து வந்ததாக கமல் ஹாசன்
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல்
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!