POLLING FLAMES

 

கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்

1 year ago 28 செப்டம்பர் 2024 08:21 AM | views : 232
கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினர் பிரேமலதாவை நேரில் சந்தித்தனர்.



பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலும் நேற்று நடந்தது. இதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரேமலதா, “’லப்பர் பந்து’ படம் கேப்டனுக்காக அர்ப்பணித்திருக்கிறோம் என இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் எங்களிடம் வந்து சொன்னார்கள். மேலும், படம் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்கள். குடும்பத்தோடு பார்த்தோம். படம் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும், பாடல்களிலும் கேப்டனுடைய தாக்கம் தெரிகிறது. கேப்டனை கொண்டாடி இருக்கிறார்கள்.

’பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் கேப்டனைக் கொண்டாடி பிரச்சாரக் கூட்டம், கட்சிக் கூட்டம் என எங்கும் ஒலித்தப் பாடல். எங்கள் கட்சியின் மிக முக்கியமான பாடல் இது. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜயகாந்தைப் பயன்படுத்திய அளவிற்குக் கூட 'GOAT' படத்தில் கேப்டனை பெரிதாகப் பயன்படுத்தவில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். இதுமட்டுமல்லாது, கேப்டனின் ‘ராஜதுரை’ படத்தின் கதையைப் போலவே இந்தப் படம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். படம் வெளிவந்து விட்டது. இனிமேல் 'GOAT' படம் பற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை. அதுவும் நல்ல படம் தான்” என்றார்.






’லப்பர் பந்து’ படத்தில் கேப்டன் பாடலை பயன்படுத்தியதற்கு காப்புரிமை கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமை யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்கள் குடும்ப சொத்தல்ல, தமிழக மக்களின் சொத்து” என்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழகம் கோவை CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் COIMBATORE AJITH கைது KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு அமமுக OPS சீமான் பிரதமர் மோடி THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை வன்னியர் தூத்துக்குடி தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION மதுரை SURIYA கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தேவர் RAJINIKANTH விடுமுறை CSK சூர்யா அஜித் தீபாவளி திருப்பரங்குன்றம்