விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ விமான நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆகாசா விமான நிறுவனத்தின் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் கடந்த 11 நாள்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில், விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையினருடனும் பேசி வருகிறோம். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.
விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு வேண்டுமென்றே போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை, இனி வாழ்நாள் முழுக்க விமானத்தில் பறக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன..இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சில விமானங்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இது தொடர்பாக, தில்லி காவல்துறை 8 தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுபோன்ற போலியான மிரட்டல்களை விடுவோரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த சம்பவங்களால், நாட்டின் விமானப் போக்குவரத்து, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதுபோன்ற மிரட்டல்களால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன, சில ரத்து செய்யப்பட்டன. .
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!