Tamil News & POLLING

 

சென்னை: சர்வதேச விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுப்பு

1 year ago 19 நவம்பர் 2024 10:30 AM 139 views
சென்னை,கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 37 வயது பெண் பயணி ஒருவர் இன்று இறந்து கிடந்ததாகவும், மேலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் விமான பணியாளர்கள் அந்த பெண் தூங்கியதாக நினைத்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண் பதிலளிக்காததை கண்டு சந்தேகமடைந்த பணியாளர்கள் உடனடியாக மருத்துவர்கள் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்து அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குழு மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


பின்னர் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழகம் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் சீமான் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் PMK கனமழை இந்திய அணி பாமக UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் CONGRESS SEEMAN கோவை EDAPPADI PALANISWAMI கொலை அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM OPS THIRUMAVALAVAN TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் நெல்லை COIMBATORE மதுரை திருநெல்வேலி சட்டசபை தேர்தல் திருமாவளவன் தென்காசி தமிழக அரசு THOOTHUKUDI திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை நயினார் நாகேந்திரன் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் நாம் தமிழர் கட்சி AJITH வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் ஓபிஎஸ் MADURAI ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி தேவர் NORTHEAST MONSOON