தமிழ் திரையுலகை பொருத்தவரை தங்களுடைய திரை பயணத்தில் பிளாப் படங்களை கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் முன்னிலையில் இருந்து வருகிறார் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். கடந்த 2023ம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான "விடுதலை" படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் சூரி என்றால் அது மிகையல்ல. இப்போது பல திரைப்படங்களில் மிகச்சிறந்த ஆக்சன் ஹீரோவாக அவர் வலம் வந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது விடுதலை படம் தான்.
இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், ட்ரைலரும் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தன்னுடைய திரைப்படங்களுக்காக அதிக மெனக்கெடல்களை மேற்கொள்பவர் வெற்றிமாறன் என்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில் இந்த "விடுதலை" படத்தின் இரண்டாம் பாகத்திற்காக விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது எட்டு நாள் கால் சீட் மட்டுமே, இருப்பினும் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த திரைப்படத்தில் பயணித்து அப்படத்தை அவர் முடித்துக் கொடுத்திருக்கிறார். அண்மையில் விடுதலை 2 இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதிக்கு இதற்காக பெரிய அளவில் வெற்றிமாறன் நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அதே போல இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வெற்றிமாறன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இந்த சூழலில் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலர் வெளியான நிலையில், அதில் வரும் சில வசனங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டு பிரபல இயக்குனரும், திரைப்பட விமர்சனமான ப்ளூ சட்டை மாறன் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலரில் "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்" என்று ஒரு வசனம் விஜய் சேதுபதி பேசுவது போல இடம்பெற்றிருக்கும். முதலில் இது நடிகர் விஜயை தாக்கி வைக்கப்பட்ட வசனம் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இது எம்ஜிஆரை தாக்கி அவர் வைத்த வசனம் என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும் உயர்வான தத்துவங்களைக் கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா? இல்லையென்றால் தத்துவமே இல்லாவிட்டாலும் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் பிறருக்கு தானம் செய்பவர் உயர்ந்த தலைவரா? இன்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி தலைவரை உயர்த்தியும், எம்ஜிஆரை தாக்கியும் வசனங்களை வெற்றிமாறன் வைத்திருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் குற்றம் சாட்டியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இது வெற்றிமாறனால் திணிக்கப்படும் வரலாறு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். சமத்துவம் எனும் எளிய தத்துவம் கொண்ட எம்.ஜி.ஆர் தனது உயிலில் எழுதி வைத்த சொத்துகள் அவருடைய பரம்பரை சொத்து அல்ல, மக்களிடம் லவுட்டிய பணமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உழைத்து அவர் சம்பாதித்த பணம் என்றும் கூறியிருக்கிறார் மாறன்.
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!