விடுதலைப் படத்தின் இரண்டாம் பாக ட்ரைலரில் "தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும்" என்று ஒரு வசனம் விஜய் சேதுபதி பேசுவது போல இடம்பெற்றிருக்கும். முதலில் இது நடிகர் விஜயை தாக்கி வைக்கப்பட்ட வசனம் என்று நம்பப்பட்டது. இருப்பினும் இது எம்ஜிஆரை தாக்கி அவர் வைத்த வசனம் என்று கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும் உயர்வான தத்துவங்களைக் கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா? இல்லையென்றால் தத்துவமே இல்லாவிட்டாலும் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் பிறருக்கு தானம் செய்பவர் உயர்ந்த தலைவரா? இன்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது .
விடுதலை 2. - வெற்றிமாறனால் திரிக்கப்படும் வரலாறு, பாகம் 2:
கதை நடக்கும் காலகட்டம் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் என தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துள்ளாராம் வெற்றிமாறன். இதில் விஜயசேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' கேரக்டர்.
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மற்றுமே உருவாக்க முடியும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது எனும் வசனம் வருகிறது.
இது விஜய்யை குறிப்பதாக கூறினர். ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம் பல முரணான கொள்கை தத்துவங்கள் உள்ளன.
இந்த வசனம் எம்..ஜி.ஆரை கிண்டல் செய்கிறது. நமக்கு ஒரே கேள்விதான். உயர்வான தததுவங்களை கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா அல்லது தத்துவம் இல்லாவிட்டாலும்.. சொந்த உழைப்பில் சம்பாதித்த தனது சொத்துக்களை பிறருக்கு தானம் செய்தவர் உயர்ந்த தலைவரா?
உங்கள் ஹீரோ பெருமாள்.. தன் மக்கள் விடுதலைக்கு போராடியபோது.. உதவிக்கரம் நீட்டியது எம்.ஜி.ஆர் என்பதை படத்தில் பதிவு செய்துள்ளீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா?
இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் .
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!