POLLING FLAMES

 

திருவண்ணாமலை மண்சரிவு- 3 குழந்தைகளின் சடலம் மீட்பு

1 year ago 02 டிசம்பர் 2024 01:19 PM | views : 208
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கினர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ராஜ்குமார் (32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் உள்ளே சிக்கினர். கவுதம், இனியா ஆகியோர் ராஜ்குமார், மீனா தம்பதியின் குழந்தைகள் ஆவர்.

இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 3 குழந்தைகளின்உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் டிடிவி தினகரன் இந்திய அணி காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் பாமக முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN CONGRESS தமிழகம் AJITH EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் KEERTHY SURESH தமிழ்நாடு OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் பிரதமர் மோடி நெல்லை கைது NELLAI சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN RAJINIKANTH தீபாவளி தேவர் திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை தென்காசி அஜித் கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி வன்னியர் சூர்யா விடுமுறை CSK கள்ளக்காதல்