POLLING FLAMES

 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணர் காலத்து தூண் என்பதே கோவில் தரப்பு வாதம்

4 months ago 15 டிசம்பர் 2025 10:40 AM | views : 278
மதுரை,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடியதாவது:- “100 வருடங்களாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் உறுதி செய்துள்ளார். அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பின் ஏன் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்?. கோவில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்கும்.

கோவிலில் பாரம்பரியமான பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், ஐகோர்ட்டில் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தால் தான் மனு தாக்கல் செய்ய முடியும். தீபம் ஏற்றுவது தொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது; கோயில் நிர்வாகத்திற்கு சட்டவிதிகள் உள்ளன; தனிநபர் உரிமையை நிறைவேற்ற முடியாது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொறுமையுடனும், கவனமாகவும் அறநிலையத்துறை தேவஸ்தானம் கையாள நினைக்கிறது. 100 ஆண்டுக்கு மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படி நடக்கிறது; தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண். சமண முனிவர்கள், இரவில் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காக தூண் வைக்கப்பட்டு வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றி உள்ளனர்; இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல என்று வாதாடினார்.

அதனை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “திருப்பரங்குன்றம் போல் மதுரையின் சமணர் மலை, மேலூர் என பல மலைகளின் உச்சியில் தூண்கள் உள்ளன. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி சமண தூண்கள் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “சமணர்கள் பழமையானவர்கள், அவர்கள் விளக்கு ஏற்றத்தானே தூணை பயன்படுத்தி உள்ளார்கள்; சில புத்தகத்தில் அது விளக்கேற்றும் தூண் என குறிப்பிடப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு நிலா வெளிச்சத்தை தாண்டி சமணர்கள் தங்கும் இடத்தில் வைக்கப்பட்ட வெளிச்சத்திற்கான தூண்களே, மதுரையின் அனைத்து மலைகளிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என வக்கீல் தெரிவித்தார.

தொடர்ந்து தர்கா தரப்பில் வாதாடியதாவது:- “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு என எதுவுமே கவனிக்கப்படவில்லை. எந்த விதமான கருத்துகளையும், சட்ட விதி முறைகளையும் பின்பற்றவில்லை. தனி நீதிபதி, தனது உத்தரவுகளில் கோயில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும், மலை மீதுள்ள நிலங்களை தர்கா ஆக்கிரமித்தது போன்று, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு இதுபோன்ற மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. இவ்வழக்கு விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். என்று வாதாடினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி PMK AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் CONGRESS INDIAN CRICKET TEAM பாமக தமிழகம் கோவை தமிழக வெற்றிக் கழகம் கனமழை COIMBATORE கொலை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கைது சீமான் NELLAI நெல்லை தேவர் தமிழ்நாடு KEERTHY SURESH வன்னியர் பிரதமர் மோடி SURIYA அமமுக OPS AJITH சூர்யா THIRUMAVALAVAN ஓபிஎஸ் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை அஜித் பாலியல் தொல்லை ELECTION COMMISSION PARLIAMENT ELECTION கள்ளக்காதல் தென்காசி அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் CSK திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை RAJINIKANTH நடிகை தூத்துக்குடி