POLLING FLAMES

 

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

4 months ago 17 டிசம்பர் 2025 01:00 PM | views : 301
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, கடந்த மே மாதம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 கல்லூரிகளில், போதிய மருத்துவர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு, தனது பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறார். இதனால், பாதிக்கப்பட்டது, ஏழை எளிய பொதுமக்களே.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை தமிழகம் PARLIAMENT ELECTION இந்திய அணி UDHAYANIDHI STALIN கோவை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் கைது INDIAN CRICKET TEAM அமமுக பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தமிழ்நாடு AJITH OPS KEERTHY SURESH BIGG BOSS TAMIL TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் கொரோனா நெல்லை சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி அஜித் மதுரை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை CSK கள்ளக்காதல் விடுமுறை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி தேவர் RAJINIKANTH SURIYA சூர்யா தென்காசி திருப்பரங்குன்றம் வன்னியர் 2024 T20 WORLDCUP