INDIAN 7

Tamil News & polling

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்..!

18 டிசம்பர் 2025 04:21 PM | views : 36
Nature

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருவதால், பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிகார் தலைமைச் செயலகத்தில், கடந்த டிச.15 அன்று நடைபெற்ற அரசு மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் வலுக்கட்டாயமாக விலக்கினார்.

பிகார் முதல்வரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நிதீஷ் குமாரின் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிகார் முதல்வருக்கு எதிராக சில சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன், பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல் உலக தாதா ஒருவர் முதல்வர் நிதீஷ் குமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், முக்கிய பிரமுகர்களை மட்டுமே அவர் அருகில் அனுமதிக்க வேண்டுமெனவும், அதிகாரிகளுக்கு பிகார் காவல் துறை டிஜிபி வினய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.இத்துடன், பிகாரில் செயல்படும் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்