POLLING FLAMES

 

திமுக தீய சக்தி என்பது யாராவது சொல்லிட்டே தெரிய வேண்டியதில்லை - அண்ணாமலை

4 months ago 18 டிசம்பர் 2025 04:18 PM | views : 344
ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது திமுக அரசை விஜய் கடுமையாக சாடினார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என்று ஆவேசமாக பேசினார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தீய சக்திகளிடம் கவனமாக இருக்க வேண்டும், தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது என பேசி இருந்தார்.

இந்த நிலையில், திருப்பூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த விஷயம் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது;

”திமுக ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கூறினர். பாஜக நீண்ட காலமாக கூறி வருகிறது. இதை யாரோ ஒருவர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சினிமா ஸ்டார், அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். சாதாரண வீட்டு பெண்மணி கூட திமுகவை தீயசக்தி என்று சொல்வதை நான் கேட்கிறேன். இதை முக்கியமான வார்த்தையாக நான் பார்க்கிறேன். சாதாரண, அடித்தட்டு மக்கள், திமுகவை தீய சக்தி என்று கூறுகின்றனர். அது வாக்குப்பெட்டியில் தெரியும். தீயசக்தி என்ற வார்த்தை, திமுகவின் அடையாளம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.”

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS PMK காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கனமழை பாமக PARLIAMENT ELECTION தமிழகம் இந்திய அணி CONGRESS கோவை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை OPS தமிழ்நாடு AJITH INDIAN CRICKET TEAM KEERTHY SURESH கைது பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக சீமான் THIRUMAVALAVAN கொரோனா சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL NELLAI TAMIL ACTRESS நெல்லை CSK வன்னியர் ELECTION COMMISSION சூர்யா விடுமுறை தீபாவளி SURIYA கள்ளக்காதல் RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் தென்காசி மதுரை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தேவர் வடகிழக்கு பருவமழை