POLLING FLAMES

 

மணமேடையில் மணமகனுக்கு அதிர்ச்சி - காதலன் கழுத்தில் மாலையை போட்ட மணப்பெண்... வீடியோ வைரல்

2 hours ago 03 மே 2026 01:11 AM | views : 5

சிந்த்வாரா,

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது, மணமகன் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டிய மணப்பெண், தனது காதலன் கழுத்தில் மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு திருமண விழாவில், மணமக்களுக்கு இடையே மாலை மாற்றும் வைபவம் மிக விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருந்த போது, மணப்பெண் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்தார்.

Also Readமராட்டியத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர் கைதுஅனைவரும் மாலை மாற்றும் நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, மணப்பெண் திடீரென மேடையிலிருந்து கீழே குதித்து கூட்டத்திற்குள் ஓடினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனது காதலனின் கழுத்தில் மாலையை போட்டார். இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள், அந்த வாலிபரை (காதலனை) பிடித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் கடந்த 2 ஆண்டுகளாக அந்த வாலிபரைக் காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

View this post on Instagram A post shared by Thanthi TV (@thanthitv)

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் PMK AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் கனமழை PARLIAMENT ELECTION கோவை தமிழகம் CONGRESS இந்திய அணி அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை பிரதமர் மோடி கைது சீமான் திருமாவளவன் தமிழ்நாடு AJITH OPS TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH INDIAN CRICKET TEAM அமமுக TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை NELLAI கொரோனா ஓபிஎஸ் RAJINIKANTH தேவர் சூர்யா தென்காசி தீபாவளி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் வன்னியர் அஜித் விடுமுறை CSK கீர்த்தி சுரேஷ் மதுரை தூத்துக்குடி THIRUMAVALAVAN SURIYA