POLLING FLAMES

 

கணவரை 2 மணி நேரம் வெளியே அனுப்பிவிட்டு... வீட்டுக்குள் இளம்பெண்ணிடம் சாமியார் செய்த வசிய பூஜை

1 hour ago 03 மே 2026 04:05 AM | views : 37

பெங்களூரு

பெங்களூரு சென்னமரே அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இதில் கணவர் கடை வைத்து வியாபாரம் செய்து, குடும் பத்தை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரது வியாபாரத்தில் சரியான லாபம் கிடைக் காமல் இருந்துள்ளது.


இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்ட பட்டு வந்துள்ளனர். இதனை சரி செய்யவதற்காக மோகன்குமார் என்ற சாமியாரிடம் சென்று தீர்வு கேட்டுள்ளனர். இதற்கு சாமியார் மோகன்குமார். உங்களது குடும்பம் பெரும் சிக்கலில் உள்ளது என்றும், கண் திருஷ்டி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் இதற்கு பரிகாரமாக வீட்டில் வசிய பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வசிய பூஜையை செய்தால், குடும்ப பிரச்சினைகள், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்று நம்பிய தம்பதி. சாமியார் சொன்ன பூஜையை தங்களது வீட்டில் நடத்த தயார் செய்தனர்.


இந்தநிலையில் பூஜைக்கு வந்த சாமியார். இதற்கு மனைவி மட்டும் வீட்டுக்குள் இருந்தால் போதும் என்று கூறி 2 மணி நேரத்துக்கும் மேலாக கணவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார். பின்னர் பூஜை செய்வதுபோல் நடித்து அந்த பெண்ணை வழுக்கட்டாயமாக வீட்டுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால், வேறு பூஜையின் மூலம் உங்களது குடும்பத்தை முழுவதும் அளித்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.


இதில் பயந்த அந்த பெண் பாலியல் வன்கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சாமியார் மீண்டும். அந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதனை ஏற்க விரும்பாத பெண், நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் கூறியுள்ளார்.


இதில் ஆத்திரம் அடைந்த கணவர் உடனடியாக இதுகுறித்து சென்னமரே அச்சுக்கட்டு போலீ சில் சாமியார் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசா ரித்தனர். இதுகுறித்து அறிந்த சாமியார் உடனடியாக தலைமறைவாகிவிட்டார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் கனமழை CONGRESS கோவை இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழ்நாடு சீமான் KEERTHY SURESH AJITH கைது TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM OPS அமமுக பிரதமர் மோடி RAJINIKANTH TAMIL ACTRESS நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN ஓபிஎஸ் கொரோனா அஜித் ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை விடுமுறை தென்காசி தேவர் 2024 T20 WORLDCUP திருப்பரங்குன்றம் மதுரை கள்ளக்காதல் தீபாவளி SURIYA வன்னியர் CSK சூர்யா தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்