POLLING FLAMES

 

உள்ளாட்சி தேர்தலில் காணாமல் போன பாமக! தலை தூக்கும் அமமுக!

4 years ago 12 அக்டோபர் 2021 10:19 AM | views : 255
6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக 78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35 சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிக இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 7 மாவட்ட கவுன்சிலர்கள், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் வெற்றி பெற்று திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 மாவட்ட கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றி பின்னிலையில் உள்ளது. பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடங்கள் கூட இல்லாத நிலை உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 74 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 74 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக 78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது.

இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35 சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, அது விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது,31,245 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் https://tnsec.tn.nic.in இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது, வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி மூலம் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் 11 மணியளவில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே பல இடங்களில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. 7 மாவட்ட கவுன்சிலர்கள், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் வெற்றி பெற்று திமுக முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 மாவட்ட கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றி பின்னிலையில் உள்ளது. அமமுக, நாம் தமிழ் கட்சி, மக்கள் நீதி மய்யம் ,பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதுவரையில் ஒரு இடங்கள் கூட இல்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழகம் கோவை PARLIAMENT ELECTION CONGRESS UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது சீமான் பிரதமர் மோடி தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN TAMIL ACTRESS நெல்லை சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL RAJINIKANTH ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் வன்னியர் தென்காசி SURIYA தீபாவளி கள்ளக்காதல் அஜித் தேவர் விடுமுறை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK வடகிழக்கு பருவமழை