POLLING FLAMES

 

இணையத்தில் வைரலாகும் ஒத்த ஓட்டு பாஜக!

4 years ago 12 அக்டோபர் 2021 10:47 AM | views : 249
கோவை பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டுதான் வாங்கியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் #ஒத்த_ஓட்டு_பாஜக ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.


கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தது.


ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். இது தவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் என பலர் இருந்தும் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் இந்திய அணி AIADMK PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் INDIAN CRICKET TEAM கோவை பாமக கனமழை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE முக ஸ்டாலின் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI தேவர் சீமான் NELLAI KEERTHY SURESH OPS தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் SURIYA கைது அமமுக நெல்லை THIRUMAVALAVAN AJITH ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி மதுரை அஜித் தென்காசி RAJINIKANTH தூத்துக்குடி நடிகை பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை CSK PARLIAMENT ELECTION விடுமுறை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல்