கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கே கடைவிரிக்கப்பட்டிருந்த பல பொருட்களில் இந்த சிம்னி விளக்கும் அடக்கம்.எப்பொழுதோ அடக்கமாகிவிட்ட சிம்னி விளக்கு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை பார்த்தவுடன் பயங்கர ஆச்சர்யம்.இந்த விளக்கு இன்னும் உபயோகத்தில் இருக்கிறதா என்று அந்த ஆச்சர்யம்
சிம்னி விளக்கு.பார்க்கவே மிக சின்னதாகவும், அதில் பொருத்தப்பட்டு இருக்கிற கண்ணாடி குடுவையானது மேலும் கீழும் சிறுத்து நடுவில் கொஞ்சம் பெரிதாய் அகண்டும் ஒப்ப இருக்கும் இந்த குடுவை, அதில் மிக சரியாய் பொருத்தப்பட்டும், ஒரு சின்ன தூண்டுகோல் திரியை ஏற்றுவதற்கும், அடிப்பாகத்தில் எண்ணைய் ஊற்ற உருண்டைப்பகுதியும் இவற்றையெல்லாம் தாங்க ஒரு சின்ன அடிப்பகுதியும் இருக்கிறது.மேலும் அதிக கனமில்லாமல் இருக்கிற ஒரு அற்புத விளக்கு இது.
முன்பொரு காலத்தில் இரவு நேரத்தில் வீடானது மிகவும் இருட்டாக இருப்பதை தவிர்க்க ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பு போல உபயோகப்படுத்தப்பட்ட விளக்கு இது.200 மில்லி சீமண்ணைய் இருந்தால் போதும் விடிய விடிய எரியும்.மின் வசதி இல்லாத காலத்தில் இந்த விளக்கும் அரிக்கேன் விளக்கும் தான் துணை.இந்த விளக்கின் துணை கொண்டு எத்தனையோ பேர் படித்து இருக்கின்றனர்.நானும் சிறு வயதில் இந்தவிளக்கில் தான் படித்திருக்கிறேன். இருட்டின் பயத்தை போக்க தலைமாட்டுக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்கியிருக்கிறேன்.அருகில் உள்ள அடுத்த அறைக்கு செல்லும் போது இந்த விளக்குதான் துணையாய் இருந்திருக்கிறது.
பள்ளி முடிந்து வந்தபின் இந்த விளக்கின் கண்ணாடியை எடுத்து விபூதி போட்டு பளிச்சென துடைத்து எண்ணைய் ஊற்றி வைப்பது தினமும் வழக்கப்படியாயிருந்தது.கரண்ட் வசதி வந்தபின்னும் இந்த விளக்கு சின்ன சின்ன உபயோகத்திற்கு பயன்பட்டு வந்தது.இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் போய்விட்டால் உடனடியாக பொருத்தி வைக்கிற விளக்கு இது தான்.கொசுவர்த்தி மேட் வந்தபின்பு இந்த சிம்னி விளக்கின் கண்ணாடியின் மேல் ஒரு பிளேடு வைத்து அதில் கொசு மேட் வைத்து சிறிதாக திரியை வைத்து மெலிதாய் எரியும் படி செய்து கொசுவிரட்டியாக பயன்படுத்தியது ஞாபகத்தில் இருக்கிறது.
மண்ணெண்ணைய் அதிகம் புழக்கத்தில் இருந்தபோது இந்த விளக்கு அத்தியாவசியமானதொன்றாக இருந்தது.எப்பொழுது மண்ணெண்னணெய் க்கு தட்டுப்பாடு வந்ததோ அதில் இருந்து இந்த அற்புத விளக்கு மறைய ஆரம்பித்தது.கரண்ட் வசதியும் வர சுத்தமாய் ஒழிந்து விட்டது.ஆனாலும் இன்னும் கரண்ட் வசதியில்லாத எத்தனையோ வீடுகளில் ஒளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதேச்சையாய் இதை எங்காவது காணும்போது நம் ஞாபகத்திலும்.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!