பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!

  ஜூலை 30, 2022 | 08:55 am  |   views : 106


மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன் (37). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் டப்பிங் கலைஞராக சில படங்களில் பணிபுரிந்தார்.










கடந்த 2016-ம் ஆண்டு அர்ஜூன் பின்னு இயக்கத்தில் வெளியான ‘அனீசியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரத் சந்திரன், சூப்பர் ஹிட்டான ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, 'கூடே', 'ஒரு மெக்சிகன் அபரதா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.





கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன். இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் இன்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.





சரத் சந்திரனிடன் திடீர் உயிரிழப்பு மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் நடித்தவர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

2023-05-07 07:43:07 - 3 weeks ago

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி? மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள


இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!

2023-05-07 07:40:07 - 3 weeks ago

இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..! ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த