POLLING FLAMES

 

டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் தமிழக ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்!

3 years ago 08 ஆகஸ்ட் 2022 07:42 AM | views : 232
இரு நாட்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி சென்று இருந்தார். முதலில் ஜெய்லர் படம் தொடர்பாகவே அவர் டெல்லி சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே 75வது விழா சுதந்திர தின விழா தொடர்பாக அவர் டெல்லி சென்றது தெரிய வந்தது. அதாவது, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கா மத்திய அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்து.

இந்த குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே நடிகர் ரஜினி டெல்லி சென்று தெரிய வந்தது. இந்தச் சூழலில் இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினி சந்தித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் ரஜினிகாந்த்- ஆளுநர் சந்திப்பு தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75ஆவது சுதந்திர தின விழா அடுத்த வாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கான நிகழ்ச்சி தொடர்பாக இருவரும் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் PMK AIADMK ரஜினிகாந்த் பாமக கனமழை முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கோவை இந்திய அணி CONGRESS PARLIAMENT ELECTION தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை AJITH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM OPS சீமான் திருமாவளவன் INDIAN CRICKET TEAM தமிழ்நாடு கைது KEERTHY SURESH அமமுக தீபாவளி சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா கள்ளக்காதல் தென்காசி CSK ELECTION COMMISSION விடுமுறை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை சூர்யா அஜித் திருப்பரங்குன்றம் RAJINIKANTH SURIYA THIRUMAVALAVAN வன்னியர் தேவர் மதுரை கீர்த்தி சுரேஷ்