திமுக அரசிற்கு 'பேனா' நினைவு சின்னம் அமைக்க பாஜக அனுமதி கொடுக்கிறார்கள், அதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீமான், "ஒரு பக்கம், 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களையும், 'எஸ்டிபிஐ' என்கிற கட்சியைச் சேர்ந்த இந்தியா முழுமைக்கும் இருக்கிற முதன்மைப் பொறுப்பாளர்களையும் 'என்ஐஏ' என்கிற அமைப்பின் மூலமாக கைது செய்கிறது. மறுபக்கம், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளது. குறிப்பாக காந்தி பிறந்தநாளான அக்டோபர் 02ஆம் தேதியன்று. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே காந்தியைக் கொன்றாரோ, அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்தியின் பிறந்தநாளன்று பேரணி நடத்துகிறது.
நாங்கள் நாம் தமிழர் கட்சியோ அல்லது மற்ற அரசியல் இயக்கங்களோ ஒரு கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்த அனுமதி கோரினால், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதென்று பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி எந்த நோக்கத்தையும், மக்கள் பிரச்சனையையும் முன்வைக்காமல் மாநிலமெங்கும் ஐம்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துகிறது என்றால், அந்தப் பேரணியின் இறுதியில் மதக் கலவரங்களை, வன்முறையைத் தூண்டுவது போலப் பேசுவது தான் அதன் நோக்கமாக இருக்கும்.
பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களே தனது வாகனங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொள்வது, தனது இல்லங்களில் குண்டு வீசி வெடிக்கச் செய்வது போன்ற நிகழ்வுகள் கடந்தக்காலங்களில் நடந்துள்ளது. அவை கண்காணிப்பு கருவியின் மூலமாக வெளியே தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக 'எஸ்டிபிஐ' அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள்.
"நாங்கள் பேரணி நடத்தக் கோரி நீதிமன்றத்திலேயே அனுமதி கேட்டால், அதை மறுக்கக் கோரி கடுமையான வாதங்களை அரசு தரப்பில் முன்வைப்பார்கள். ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக வாதிடவே இல்லை. அக்டோபர் 02ஆம் தேதியன்று 'கிராம சபை' கூட்டம் நடைபெறும் காரணத்தினால், காவலர்கள் அங்குப் பாதுகாப்பு பணிக்குச் சென்றுவிடுவார்கள் அன்பதால் பேரணி நடத்த அனுமதி மறுக்குமாறு வாதிட்டுள்ளார்.
நீதிபதி அதை ஒரு பெரிய தர்க்கமாகக் கருதாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டார். ஐயா கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா காலத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் பேரணிகள் மறுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கூட இது போன்ற பேரணிகள் நடக்கவில்லை. ஆனால், இந்த திமுக அரசிற்கு 'பேனா' நினைவு சின்னம் அமைக்க பாஜக அனுமதி கொடுக்கிறார்கள், அதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இவர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!