POLLING FLAMES

 

சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியது அமேசான்!

3 years ago 07 நவம்பர் 2022 05:09 PM | views : 241
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி, சிவராஜ்குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதற்கிடையே தமிழில் உருவாகும் பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி வெளியீடு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகப்பெரும் தொகைக்கு இந்த டீல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன், சீதா ராமம், கே.ஜி.எஃப். 2 உள்ளிட்ட படங்களை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துடைய ஓடிடி ரிலீஸையும் அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் காங்கிரஸ் PARLIAMENT ELECTION இந்திய அணி தமிழகம் CONGRESS கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் INDIAN CRICKET TEAM அமமுக கைது AJITH KEERTHY SURESH சீமான் OPS தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கள்ளக்காதல் அஜித் தேவர் வன்னியர் தூத்துக்குடி ELECTION COMMISSION SURIYA தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH விடுமுறை CSK கீர்த்தி சுரேஷ் சூர்யா திருப்பரங்குன்றம் மதுரை