சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கழிவுநீர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி மேடவாக்கம் பகுதியில் வழக்கமாக சூர்யா நகரில் கழிவுநீர் லாரியை இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது கழிவுநீர் லாரி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கழிவுநீர் லாரியை அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் லாரி கிடைக்காததால் இதுகுறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பா தலைமையில் தனிப்படை அமைத்து லாரி மாயமான இடத்தில் உள்ள சிசிடி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
சிசிடி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் லாரி திருடுபோனதும், லாரியை திருடி செல்வது காஞ்சிபுரத்தை சேர்ந்த பழைய ஓட்டுனர் 58-வயதான ஏழுமலை மாதிரி உள்ளது என லாரி உரிமையாளர் வெங்கடேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தனிப்படையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சுமார் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சென்று திருவண்ணாமலை மாவட்டம் சுமங்கலி கூட்ரோடு அருகே ஓட்டுநர் ஏழுமலையை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் பதுக்கிவைத்திருந்த திருடிய கழிவுநீர் லாரியை மீட்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல மாதங்களாக ஏழுமலைக்கு சம்பளம் தராமல் வெங்கடேசன் அலைக்கழித்ததாகவும் பலமுறை சம்பளத்தை கேட்டபோது தராமல் அலட்சியப்படுத்தியதால் ஆத்திரமடைந்து வெங்கடேசனை பழி தீர்க்கவே கழிவுநீர் லாரியை திருடி சென்றதாக ஏழுமலை விசாரணையில் ஒப்புக் கொண்டதாக கூறினார்.
பின்னர் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லாரி உரிமையாளர் ஓட்டுநருக்கு மாத ஊதியம் தராததால் ஆத்திரமடைந்து லாரியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!