POLLING FLAMES

 

2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை!

3 years ago 09 டிசம்பர் 2022 05:40 AM | views : 242
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிந்தது.

கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், வி.பி.துரைசாமி, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பா.ஜ.க அண்ணாமலை பேசியதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ளன. இதில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியா ஓ.பன்னீர்செல்வமா என அவர்கள் பின்னால் சென்று கொண்டிருக்க முடியாது. அந்த அவசியமும் இல்லை. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு கணிசமாக வாக்குகளை பெற்றது போல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்” என கூறினார்.



மேலும், “பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கட்சியின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் யாரும் நடந்துகொள்ள கூடாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை குறித்து தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மாமல்லபுரம் ஆகிய 3 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மாபெரும் வரவேற்பை பெற பா.ஜ.க. நிர்வாகிகள் பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS தமிழகம் PARLIAMENT ELECTION கோவை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் BIGG BOSS TAMIL RAJINIKANTH கொரோனா வன்னியர் மதுரை ELECTION COMMISSION சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை அஜித் தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை