POLLING FLAMES

 

ஜனவரி 10-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. மின்சாரம் தடையா?

3 years ago 15 டிசம்பர் 2022 07:02 AM | views : 221
தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2ம் தேதி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய ஊழியர்கள் நூதன முறையில் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காலி பணியிடங்களை நிரப்புதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தத்தின் அவசரத்தை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி ஆயத்த விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN தவெக பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK முக ஸ்டாலின் ரஜினிகாந்த் பாமக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN இந்திய அணி கோவை CONGRESS PARLIAMENT ELECTION தமிழகம் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE தமிழ்நாடு சீமான் KEERTHY SURESH INDIAN CRICKET TEAM OPS AJITH TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN NELLAI நெல்லை கொரோனா TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் தேவர் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION விடுமுறை தென்காசி திருப்பரங்குன்றம் RAJINIKANTH தூத்துக்குடி SURIYA மதுரை வன்னியர் சூர்யா தீபாவளி அஜித் CSK 2024 T20 WORLDCUP