POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்... நாளை முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம்?

3 years ago 26 டிசம்பர் 2022 04:00 AM | views : 204
பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன் நாளை (27-ந்தேதி) முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் கனமழை மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாமக தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை தமிழகம் சட்டசபை தேர்தல் திருமாவளவன் காங்கிரஸ் கைது UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் இந்திய அணி COIMBATORE CONGRESS EDAPPADI PALANISWAMI தேவர் OPS சீமான் அமமுக வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN பிரதமர் மோடி கொலை KEERTHY SURESH INDIAN CRICKET TEAM வன்னியர் தமிழ்நாடு NELLAI PARLIAMENT ELECTION தென்காசி ஓபிஎஸ் TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS தீபாவளி AJITH மதுரை நெல்லை SURIYA NORTHEAST MONSOON அஜித் கள்ளக்காதல் விடுமுறை CSK திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி PRIME MINISTER MODI BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை MADURAI TAMILAGA VETTRI KAZHAGAM மோடி அன்புமணி ELECTION COMMISSION சூர்யா