POLLING FLAMES

 

உதயநிதி ஸ்டாலின் - அண்ணாமலை செங்கலுடன் மாறி, மாறி பிரசாரம்

3 years ago 21 பிப்ரவரி 2023 11:19 AM | views : 234
தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. நேற்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசும் போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார்.மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார்.

இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.இதற்கு பதிலடியாக நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.

உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் PMK இந்திய அணி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாமக முக ஸ்டாலின் கனமழை பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை AJITH PARLIAMENT ELECTION திருமாவளவன் OPS KEERTHY SURESH கைது சீமான் அமமுக தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி TAMIL ACTRESS கொரோனா ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் NELLAI RAJINIKANTH சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL நெல்லை THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் விடுமுறை தென்காசி வன்னியர் SURIYA மதுரை தீபாவளி ELECTION COMMISSION தேவர் CSK சூர்யா கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை அஜித் தூத்துக்குடி