விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இந்த விஷயம் இவர்களின் பெற்றோருக்கு தெரியாது.அதன்படி நேற்று இரவு 9 மணியளவில், மாணவனும், மாணவியும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவன், மாணவியை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதனை மாணவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் மாணவனை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் மயங்கி விழுந்தான்.
அதன்பின்னர் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மாணவியும் மயக்கமடைந்தார். பின்னர் மாணவன், மாணவியிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளி செயின், கொலுசு மற்றும் தங்க மோதிரத்தை பறித்து தப்பிச் சென்றனர்.அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து விரைந்து சென்ற விக்கிவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மாணவனையும், மாணவியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், தகவலறிந்த டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவன்- மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காதலுனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
அரியானாவில் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, சர்வதேச விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரியும் 46 வயது பெண், பயிற்சிக்காக அண்மையில் குருகிராமிற்கு வந்திருந்தார், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். ஹோட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!