இன்றைய சமகால பின்னணியிலும், பெண்கள் மறுமணம் செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு பரப்ப பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், மறுமணம் செய்யும் கணவன்கள் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகுவதில்லை. இத்தகைய கொடுப்பினை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குஜராத்தில், திருமணம் நடை பெறுவதற்கு முன்பே, மணமகனுக்கு மறுமணம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் பல்வேறு விவாதங்களை சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது மணமகள் இறந்துவிட, மணமகனுக்கும் இறந்தவரின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகும் செய்தியில், " குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மகாதேவ் திருக்கோயில் முன்பாக மணமகன் விஷால் மற்றும் மணமகள் கேதால் (Hetal) ஆகிய இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண சடங்குகள்போது, மணமகள் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் எந்தவித பலனும் இல்லை. மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடந்து, அதே திருமண மேடையில் இறந்தவரின் தங்கையை திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். இறந்தவர் பிணவறையில் இருக்கும்போதே, இரண்டாம் மகளுக்கு அதே மணமகனை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நகர் மன்ற உறுப்பினரும் மாலதாரி சமாஜி என்ற அமைப்பின் தலைவருமான லக்ஷமன்பாய் ரத்தோர் கூறுகையில், " இது மிகவும் துயரமான நிகழ்வு. மணமகன் வீட்டாரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என்ற முடிவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
2021ல் இதே போன்ற சம்பவம்:
உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும், இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர் .
இது பற்றி கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருக்கிறது.
என்னவொரு கொடுமை. மணப்பெண்களின் நிலை மனதை பிசைகிறது :(https://t.co/nbceSMdpmC
— Kavitha Muralidharan (@kavithamurali) February 28, 2023
இருப்பினும், இந்த நிகழ்வை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது மகளின் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பும் அவர்கள், ஒரு நியாயமான திருமண வாழ்ககைக்கு ஆணும், பெண்ணும் முக்கியமானவர்கள். ஆனால், பெரும்பாலான திருமணங்களில் பெண்களின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர், சுற்றத்தினரின் வற்புறுத்தல்களை மட்டுமே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!