Today Rasi Palan : மணமாகாத இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) நல்ல வரன்கள் வந்து சேரும்.!

மார்ச் 15, 2023 | 02:54 am | views : 32
மேஷம்: இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம்: இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மிதுனம்: இன்று ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கடகம்: இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாள். தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
Also read... நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார்
சிம்மம்: இன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கன்னி: இன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்: இன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
விருச்சிகம்: இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
தனுசு: இன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மகரம்: இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கும்பம்: இன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
மீனம்: இன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும் நாள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
![]() |
![]() |
![]() |
![]() |
நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும் மிமிகிரி செய்யும் திறமை மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் கோவை குணா. கவுணடமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை!
சென்னை : அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது.பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி
சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
பீஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக
நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிப்பு: பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் கைது
கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த விவகாரம் பாஜக-அதிமுக கூட்டணியில் சலசலப்பை
அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒரே அணியாக மாற்றி தி.மு.க.வை வீழ்த்துவோம்- டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6-வது ஆண்டு தொடக்கவிழா ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.விழாவில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அங்குள்ள 70 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார்.
அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு - மறைந்த தாயின் காலை பிடித்து அழுத ஓபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார்.
அவரது உடல்நிலை
வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் BRIDGE கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கல்வி, மருத்துவம், இயற்கை, வானிலை என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கூறினார்.