POLLING FLAMES

 

டூப்ளசிஸ் விளாசல்… மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு அணி

3 years ago 03 ஏப்ரல் 2023 12:29 AM | views : 290
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது.இதையடுத்து மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா10 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனால் 5ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. சூர்ய குமார்யாதவ் 15 ரன்னில் வெளியேற, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 84 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணி தடுமாறிக் கொண்டிருந்தது.

இதன் பின்னர் இணைந்த திலக் வர்மா நெஹல் வதேரா இணை சரிவை மீட்டெடுத்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நெஹல் வதேரா21 ரன்னும், டிம் டேவிட் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க அர்ஷத் கான் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 171 ரன்களை குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி – கேப்டன் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர்.

இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் விக்கெட்டிற்கு இருவரும் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும 6 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல் சர்வ சாதாரணமாக 2 சிக்சர்களை விளாசினார். விராட் கோலி 49 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்சருடன் 89ரன்கள் எடுக்க பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஏற்கனவே கடந்த 10 சீசன்களாக பெங்களூரு அணி முதல் போட்டியில் தோல்வியடைந்து வரும் நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியிலும் தோல்வி கண்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU ANBUMANI RAMADOSS PMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் கனமழை பாமக இந்திய அணி PARLIAMENT ELECTION தமிழகம் CONGRESS கோவை கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI AJITH அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM சீமான் தமிழ்நாடு OPS கைது TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH NELLAI கொரோனா ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN தீபாவளி SURIYA வன்னியர் தூத்துக்குடி விடுமுறை மதுரை ELECTION COMMISSION தேவர் CSK சூர்யா அஜித் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH திருப்பரங்குன்றம் தென்காசி வடகிழக்கு பருவமழை