கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும் ரஜினிகாந்தின் புதிய படங்கள் வெளியானால் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் ஏகப்பட்ட ரசிகர்கள் ரசிக்கும் படி இயக்கி மீண்டும் ரஜினி ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் நிறுவியுள்ளார். காலா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது.
வரும் பொங்கலுக்கு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படம் வெளியாக போகிறது. அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா அறிவித்துள்ளது.
அ எழுத்தில் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆண்டவன் என்றும் ஆதித்யன் என்றும் சில பெயர்களும் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. நாளை மாலை 5 மணிக்கு தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் எல்லாம் தற்போது காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாளை நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் ஏதாவது அப்டேட் விடுவாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!