POLLING FLAMES

 

அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது: ராகுல் காந்தி தாக்கு

2 years ago 12 டிசம்பர் 2023 02:57 PM | views : 231
புதுடெல்லி:பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான். அவர்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்து தவறு செய்துவிட்டார் என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ ஜவகர்லால் நேரு கொண்டு வரவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:ஜவகர்லால் நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது, அதை மாற்றி எழுதும் பழக்கம் அவருக்கு உண்டு.நாடுமுழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதை திசை திருப்பவே நேரு குறித்து அமித்ஷா விமர்சித்துள்ளார்.நாட்டின் செல்வங்கள் எங்கே, யாருக்கு செல்கின்றன? ஆனால் இந்த விஷயம் குறித்து பேச அவர்கள் விரும்பமாட்டார்கள்.ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் PMK ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை முக ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக தமிழகம் கோவை CONGRESS இந்திய அணி PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கைது அமமுக OPS KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM AJITH தமிழ்நாடு சீமான் INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா THIRUMAVALAVAN நெல்லை NELLAI BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் RAJINIKANTH ELECTION COMMISSION விடுமுறை மதுரை திருப்பரங்குன்றம் தென்காசி கள்ளக்காதல் சூர்யா வன்னியர் SURIYA அஜித் தேவர் CSK வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்