POLLING FLAMES

 

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் ஆலோசனை கூட்டம்

4 years ago 13 ஜூலை 2021 05:24 AM | views : 248
திசையன்விளை யில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் இணைப்பு திட்டம் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. விறுவிறுவென நடைபெறும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் குறித்த நிறை குறைகளை விவசாயிகளிடம் கேட்கும் பொருட்டு திசையன்விளை செல்வமருதூர் பயணியர் விடுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில்திறந்த வெளியில் நடைபெற்றது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு தாமிரபரணி_ கருமேனியாறு_ நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டமானது அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆறு கட்டங்களாக நடைபெறும் வெள்ள நீர் கால்வாய் திட்டப் பணிகள் 80% சதவிகிதம் முடிக்கப்பட்டு இன்னும் 20 சதவீத பணிகளை முடியும் தருவாயில் உள்ளது.

பொன்னாக்குடி அருகே நாற்கர சாலை ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .

மேலும் இத் திட்ட பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான 214 கோடி ரூபாய் நிதி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஒதுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், மீதி தொகை194 கோடி ரூபாய் உரியவர்களுக்கு திட்டப்பணிகள் முடிப்பதற்குள் முதலமைச்சர் வழங்குவார் என்றும் தெரிவித்தார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட திசையன்விளை தாலுகா விவசாயிகளின் காரசாரமான சரமாரி கேள்விகளுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்ட அதிகாரிகள் தகுந்த பதில்களையும் விளக்கங்களையும் அளித்தனர். கூட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்ட துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள், வெள்ளநீர் கால்வாய் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார்,காங்கிரஸ் மூத்த தலைவர் சேம்பர் கே.செல்வராஜ், விவேக் முருகன், லயன் டி.சுயம்புராஜன், தங்கையா கணேசன்,தி.மு.க ஒன்றிய செயலாளர் கள் ஜோசப் பெல்சி, வி.எஸ் ஆர் . ஜெகதீஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் PMK டிடிவி தினகரன் இந்திய அணி ரஜினிகாந்த் AIADMK ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் பாமக தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கனமழை காங்கிரஸ் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN தமிழகம் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் PARLIAMENT ELECTION கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE AJITH KEERTHY SURESH தமிழ்நாடு OPS அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது பிரதமர் மோடி நெல்லை கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL ஓபிஎஸ் NELLAI THIRUMAVALAVAN RAJINIKANTH சட்டசபை தேர்தல் தென்காசி கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் CSK விடுமுறை தேவர் தீபாவளி வன்னியர் SURIYA ELECTION COMMISSION மதுரை சூர்யா வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் அஜித்