POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

1 year ago 16 மார்ச் 2025 12:03 PM | views : 259
சென்னை,

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், நாளை (திங்கட்கிழமை) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாளை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தின் தொடக்கத்தில் திருக்குறளை படித்து அவையை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைப்பார். பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், டாக்டர் செரியன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அதன் பிறகு கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரமான 'ஜீரோ ஹவர்' எடுக்கப்படும். அப்போது உதயகுமார் தனது தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோருவார். அல்லது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு நேரத்தை குறிக்கும்படி அவர் கோரலாம்.

தீர்மானத்தை உடனே எடுக்கும்பட்சத்தில், சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவு வெளியே சென்று விடுவார். பின்னர் துணை சபாநாயகர் அல்லது அவையை நடத்துவோர் பெயர் பட்டியலில் உள்ளவர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்துவார். வேறு நேரம் குறிக்கப்பட்டு இருக்கும்பட்சத்தில், அந்த நேரம் வந்ததும் சபாநாயகர் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் அப்பாவு வெளியே செல்வார்.

பின்னர் அந்த தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசுவார். அவரது விவாதத்திற்கு முதல்-அமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதிலளித்து பேசுவார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டால், 'ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க' என்று கூறும்படி துணை சபாநாயகர் கேட்டுக்கொள்வார். தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் கணக்கிட்டு துணை சபாநாயகர் தீர்ப்பளிப்பார்.

சட்டசபையில் தற்போது தி.மு.க.வின் பலம் 133-ஆகவும், அ.தி.மு.க.வின் பலம் 66-ஆகவும் உள்ளது. தீர்மானம் தோற்றுவிட்டால், சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார். ஒருவேளை எண்ணிக் கணிக்கும் 'டிவிஷன்' முறைப்படி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், நேரம் குறிக்கப்பட்டு அவையின் நுழைவு வாயில்கள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்தால், அவர் அமைச்சர் என்றாலோ அல்லது எம்.எல்.ஏ. என்றாலும் யாரும் அவைக்குள் வர முடியாது.

அந்த வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். தமிழக சட்டசபையில் 6 டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எழுந்து நிற்கச் செய்து அவர்களின் வாக்குகளை சட்டசபை செயலாளர் பெற்று, அதை எண்ணிக் கணித்து, அதை துணை சபாநாயகரிடம் சட்டசபை செயலாளர் அளிப்பார். அதன் அடிப்படையில் தீர்மானத்தின் முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK உதயநிதி ஸ்டாலின் AIADMK TAMIL NADU டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் பாமக கனமழை அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN CONGRESS முக ஸ்டாலின் கோவை திருமாவளவன் இந்திய அணி ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI கைது சீமான் COIMBATORE தமிழகம் பிரதமர் மோடி KEERTHY SURESH INDIAN CRICKET TEAM வன்னியர் தேவர் கொலை OPS வடகிழக்கு பருவமழை அமமுக THIRUMAVALAVAN தமிழ்நாடு AJITH மதுரை NELLAI நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் SURIYA கொரோனா தென்காசி சூர்யா PARLIAMENT ELECTION PRIME MINISTER MODI NORTHEAST MONSOON CSK ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் ASSEMBLY ELECTIONS BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் அன்புமணி கள்ளக்காதல் அஜித் கீர்த்தி சுரேஷ் விடுமுறை தூத்துக்குடி மோடி பாலியல் தொல்லை