மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர்.
திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!