நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!